வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு: தி.மு.க. பட்டியலிட்ட பாதிப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் வைத்திருக்கிறார்? மு.க.ஸ்டாலின் கேள்வி
வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும், தி.மு.க. பட்டியலிட்டுள்ள விவசாயிகளுக்கான பாதிப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் வைத்திருக்கிறார்? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்விகள் எழுப்பியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடிமராமத்து திட்டத்தில் ஊழல், விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளில் ஊழல், மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் கூட லட்சக்கணக்கான போலிகளை சேர்த்து நிதியை சுரண்டிய அ.தி.மு.க. ஆட்சியின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘விவசாயி’ என்று சொல்லிக்கொள்ள எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. ஒரு விவசாயி என்பவர், விவசாயிகளின் திட்டத்திலேயே ஊழல் செய்ய மாட்டார். எந்த மனிதரும் தனது சொந்த வீட்டிலேயே கன்னக்கோல் போடமாட்டார். விவசாயிகளுக்கு முழுக்க முழுக்க எதிரான வேளாண் சட்டங்களை ஆதரிக்க மாட்டார்.
விவசாயிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் விளைபொருட்களுக்கு அதிக விலை கேட்டுப் போராடினாலும், குறைந்தபட்ச ஆதார விலையையாவது கொடுங்கள் என்பதுதான் அவர்களின் தவிப்பாக இருக்கிறது. அந்த குறைந்தபட்ச ஆதார விலை என்ற வார்த்தையே இல்லாத வேளாண் சட்டங்களை இரு அவைகளிலும் ஆதரித்து வாக்களித்து விட்டு, அந்த வேளாண் விரோத சட்டங்களுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் பேசியும் வருகிறார் என்றால் அவர் உண்மையிலேயே விவசாயியா? இல்லை ஊரை ஏமாற்ற போட எத்தனிக்கும் உத்தமர் வேடமா?
வேளாண் மகாவிஞ்ஞானி
அ.தி.மு.க. ஆதரித்துள்ள ஏன், முதல்-அமைச்சர் பழனிசாமி ஆதரிக்க உத்தரவிட்ட வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற ஒரேயொரு சொற்றொடரை எங்கேயாவது கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாவிட்டால், விவசாயிகளிடம் இரு கைகூப்பி மன்னிப்பு கேட்பாரா? விவசாயத்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று, தன்னை வேளாண் மகாவிஞ்ஞானியாக மனதளவில் கற்பனை செய்துகொண்டு, மார்தட்டிச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசின் சட்டங்களை பற்றி ஆராய்ந்து கருத்துகளை சொல்ல விவசாயியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவும், விவசாயிகள் நலனில் அன்பும், அக்கறையும் இருந்தாலே போதுமானது.
இவருக்கு அந்த அடிப்படை இயல்புகள் இல்லை அல்லது குறைவு என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? இந்த சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோட்டையை முற்றுகையிடப்போனார்களே அவர்கள் எல்லாம் விவசாயிகள் விவசாயத்தை பற்றி அறிந்தவர்கள், புரிந்தவர்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லையா எடப்பாடி பழனிசாமி? வடபுலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள், இந்த சட்டங்களை எதிர்த்து ஆவேசமாக குரல் கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்பாரா எடப்பாடி பழனிசாமி?
என்ன பதில் வைத்திருக்கிறார்?
இந்த சட்டங்களை எதிர்த்து சிரோமணி அகாலி தள மந்திரி ஒருவர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறாரே; அவர் விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாததால்தான் ராஜினாமா செய்தாரா? காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரீய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், தி.மு.க. உள்ளிட்ட இந்தியாவின் 18 அரசியல் கட்சிகள், இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளனவே; அவர்கள் அனைவருக்கும் விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதா?
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்யானது என்று இந்த சட்டங்களை எதிர்த்து குற்றம்சாட்டியிருக்கும் அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழுவினருக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது என்கிறாரா எடப்பாடி பழனிசாமி? எல்லாம் எனக்கு தெரியும். என்னை எதிர்ப்போர்க்கு எதுவும் தெரியாது என்று நினைப்பதும், பேசுவதும், ஆணவத்தின் அடையாளம். அழிவின் ஆரம்பம் என்ற ஆன்றோர் அறிவுரையை, எடப்பாடி பழனிசாமி எண்ணிப் பார்க்கவேண்டும். தி.மு.க. விவசாய, விவசாய தொழிலாளர் அணியின் சார்பில் விவசாயிகளுக்கு என்னென்ன பாதிப்புகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏராளமானோர் எதிர்க்கும் வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அரசின் பரம அடிமையாக, பணிந்து, பணிந்து ஆதரித்த எடப்பாடி பழனிசாமி, பட்டியலிடப்பட்டுள்ள பாதிப்புகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story