மாநில செய்திகள்

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - கட்சி தலைமை அலுவலகம் அறிவிப்பு + "||" + Temujin General Secretary Vijayakand is in perfect health - Party Headquarters Announcement

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - கட்சி தலைமை அலுவலகம் அறிவிப்பு

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - கட்சி தலைமை அலுவலகம் அறிவிப்பு
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த்(வயது 68) உடல் நலக்குறைவு காரணமாக, பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.


இதனையடுத்து விஜயகாந்திற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து கொரோனாவிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் என்றும் மருத்துவமனைக்கு சென்ற போது லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மருத்துவமனையில் இன்னும் சில தினங்கள் விஜயகாந்த் சிகிச்சை பெறுவார் என்றும் முழுமையாக குணமடைந்த பின்னர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.