அரசு சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா; திருச்செந்தூர் மணிமண்டபத்தில், சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை


அரசு சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா; திருச்செந்தூர் மணிமண்டபத்தில், சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 24 Sept 2020 11:49 AM IST (Updated: 24 Sept 2020 11:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அரசு சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அங்கு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி,

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதனை கடந்த பிப்ரவரி மாதம் 22ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

மேலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 24ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், அவரது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது.

அதன் அடிப்படையில் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு அரசு விழாவாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெறுகிறது.

விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாரிசுதாரர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.

இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர்களும், அலுவலர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Next Story