சென்னையில் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் ‘திடீர்’ தேர்வு புறக்கணிப்பு போராட்டம்
சென்னையில் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நேற்று திடீரென தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 21-ந்தேதி முதல் தேர்வுகள் நடந்து வருகிறது. இதே போன்று, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவிகள் மற்றும் மாணவர்களும், அரியர் தேர்வு எழுதும் மாணவிகள் மற்றும் மாணவர்களும் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் மிருதுளா மற்றும் மாவட்ட செயலாளர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் நேற்று காலை திடீரென தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து மிருதுளா கூறும்போது, “பி.எட்., எம்.எட். மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தப்படுகிறது. அதே போன்று டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும் இணைய வழியில் தேர்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
இதையடுத்து தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சென்றனர். முதலாம் ஆண்டு டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு உதவியாக போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டாம் ஆண்டு டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story