ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு தனி ஹெலிகாப்டரில் வந்த அ.தி.மு.க. நிர்வாகி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர்,
அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாநில துணை செயலாளர் விஷ்ணு பிரபு நேற்று முன்தினம் தனி ஹெலிகாப்டரில் தனது குடும்பத்தினரோடு கோவையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தார். அங்குள்ள ஒரு மைதானத்தில் அந்த ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
பின்னர் விஷ்ணு பிரபுவும், அவருடைய குடும்பத்தினரும் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சக்கரத் தாழ்வார் சன்னதியில் நடைபெற்ற சுதர்சன ஹோமத்தில் கலந்து கொண்டனர். அப்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பெயரில் அர்ச்சனை செய்யப் பட்டது. பின்னர் நிருபர்களிடம் விஷ்ணு பிரபு கூறுகையில், “மீண்டும் 3-வது முறையாக தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதற்காக ஹோமம் நடைபெற்றது” என்று கூறினார்.

Related Tags :
Next Story