“மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம்” காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டி
“ராகுல்காந்தி கனவை நிறைவேற்றும் வகையில் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம்”, என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
சென்னை,
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளரும், கர்நாடக மாநில எம்.எல்.ஏ.வுமான தினேஷ் குண்டுராவ் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் நல்வாழ்வுக்காக என கூறிக்கொண்டு அவர்களின் எதிர்காலத்தை அழிக்கவல்ல 3 மசோதாக்களை நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்துள்ளது. எதிர்க்கட்சிகளின் எந்தவொரு கருத்தையும் கேட்காமல் சர்வாதிகார போக்குடன் இந்த மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இன்றைக்கு பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் இச்சட்ட மசோதாக்களை எதிர்த்து வீதிக்கு வந்து போராடுகிறார்கள். காரணம், விவசாயிகளிடம் எந்தவொரு கருத்தையும் கேட்காமல், அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இந்த மசோதாக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி மாநில அரசுகளின் உரிமைகளை பறித்ததுடன் பொருளாதார சீரழிவுக்கும் மத்திய அரசு வித்திட்டது. தமிழகம் உள்பட பல மாநிலங்களுக்கு இன்னும் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை மத்திய அரசு வழங்காமல் இருக்கிறது. தேசிய கல்வி கொள்கை மூலம் மீண்டும் மாநில அரசுகளின் சிறப்பை மத்திய அரசு கெடுக்கிறது. தற்போது வேளாண் மசோதாக்கள் என்ற பெயரில் விவசாயத்தை முழுக்க, முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரைவார்க்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
மத்திய அரசின் இலக்கு பெருநிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் ஆதரவுக்கரம் நீட்டுவது தான். நாட்டின் அனைத்து வளங்களையும் தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. பொருளாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் மத்திய அரசு தோல்வியையே சந்தித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து தினேஷ் குண்டுராவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- வேளாண் மசோதாக்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளதே...
பதில்:- நியாயமாக அ.தி. மு.க. அரசும் இம்மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அ.தி.மு.க. அதை தவிர்த்திருக்கிறது.
கேள்வி:- சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?
பதில்:- தமிழகத்தில் காங்கிரஸ் வலுப்பெற்று வருகிறது. நிச்சயமாக இம்முறை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே ஆட்சி அமைக்கும். பெரும்பான்மையான இடங்களை நாங்கள் பெறுவது நிச்சயம். மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில் வரும் சட்டசபை தேர்தலை தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்கும்.
வீண் வதந்தி
கேள்வி:- வேளாண் மசோதாக்கள் குறித்து வீண் வதந்திகளை எதிர்க்கட்சிகள் கிளப்பி விடுகிறார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாரே?
பதில்:- வீண் வதந்தி என்றால் ஏன் விவசாயிகள் போராட்டத்தில் குதிக்க போகிறார்கள். பஞ்சாப், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். வருகிற 28-ந்தேதி நாடு முழுவதும் விவசாயிகள் அணி திரண்டு, ராஜ்பவனை நோக்கி ஊர்வலமாக செல்ல இருக்கிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். இதெல்லாம் எதற்காக? விவசாயிகளின் எதிர்காலத்துக்காக...
கேள்வி:- கொரோனா தடுப்பு பணியில் மத்திய அரசின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கிறதா?
பதில்:- கொரோனா தடுப்பு பணியில் அனைத்து விதங்களிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. நல்ல திட்டமிடல் இல்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் இருக்கைகள் காலியில்லை. தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிக கட்டணம் என மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு மத்திய அரசு ஆளாக்கி விட்டது.
மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.
பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story