நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி


நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 25 Sept 2020 5:52 PM IST (Updated: 25 Sept 2020 5:52 PM IST)
t-max-icont-min-icon

நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த  எஸ்.பி பாலசுப்ரமணியம் , இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், தனியார் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு  4 மணியளவில் கொண்டு வரப்பட்டது. எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் , அஞ்சலிக்காக இன்று இரவு முழுவதும் நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்படுகிறது. எஸ்.பி.பி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அதிக அளவு திரண்டுள்ளனர்.  நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் எஸ்.பி.பி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Next Story