எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" முதலமைச்சர் அறிவிப்பு
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" என முதலமைச்சர் அறிவித்துள்ளார்
சென்னை,
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் , இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ "தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பி" எஸ்.பி.பி-இன் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story