ராகுல்காந்தியிடம் உ.பி. போலீஸ் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது - கமல்ஹாசன்
ராகுல்காந்தியிடம் உ.பி. போலீஸ் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை,
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைக் பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல்காந்தி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக இருவரையும் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.
ராகுல்காந்தி கைது சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராகுல்காந்தி கைது நடவடிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்க்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில் ராகுல்காந்தியிடம் உ.பி. போலீஸ் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது என்றும் குண்டர்கள் ஆட்சி நடத்தவா மக்கள் வாக்களித்தார்கள் எனவும் வினவியிருக்கிறார். மேலும், இது போன்ற கீழ்த்தரமான நிகழ்வுகளை பெரும்பான்மையானோர் கண்டிக்காவிட்டால் வெறுப்புணர்வு தான் அதிகரித்து பரவும். என்று குறிப்பிட்டுள்ளர்.
Nadir of political misbehavior! Shame on UP Police. We, the people, voted for such thuggery. Irrespective of the party and its philosophy, rancour and hate will only breed and multiply, unless condemned by the majority.
— Kamal Haasan (@ikamalhaasan) October 1, 2020
Related Tags :
Next Story