அக்டோபர் 5-ம் தேதி முதல், அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
அக்டோபர் 5-ம் தேதி முதல், அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
அக்டோபர் 5-ம் தேதி முதல், அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும். தமிழக அரசால் அங்கிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பயணியாளர்கள் வரும் 5 ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம். அத்தியாவசியப் பணியாளர்களுக்காக குறைந்த அளவில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைகாட்டி பயணிக்கலாம். சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story