திண்டுக்கல் லியோனி சுவரொட்டியை கிழித்த தி.மு.க.வினரால் பரபரப்பு
திண்டுக்கலில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் லியோனி சுவரொட்டியை அக்கட்சியினரே கிழித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்,
தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை திண்டுக்கல் லியோனிக்கு அக்கட்சி மேலிடம் சமீபத்தில் அளித்தது. இதற்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதில், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
எனினும், ஐ.பெரியசாமி படம் இல்லாததால், தி.மு.க.வினர் ஆத்திரத்தில் அந்த சுவரொட்டியை கிழித்ததாக கூறப்படுகிறது. கட்சியில் பதவி வழங்கப்பட்ட நபரின் சுவரொட்டியை கட்சியினரே கிழித்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story