46-வது நினைவு தினம்: காமராஜர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி


46-வது நினைவு தினம்:  காமராஜர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி
x
தினத்தந்தி 3 Oct 2020 3:25 AM IST (Updated: 3 Oct 2020 3:25 AM IST)
t-max-icont-min-icon

காமராஜரின் 46-வது நினைவுதினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சியினரும், நாடார் சங்கத்தினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை,

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 46-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவருடைய நினைவு மண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று காமராஜர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், உருவப்படத்துக்கு மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏ.தர்மராஜ், ஆசைத்தம்பி, விஜய் மாரீஸ், ஆர்.சிவகுமார், ஜி.சந்தானம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் தாமோதரன் தலைமையில் பொதுச்செயலாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஐ.டி. பிரிவு துணைத்தலைவர் மயிலை தரணி, பொறுப்பாளர் துரை உள்ளிடோரும், பா.ஜ.க. சார்பில் மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், கல்விப்பிரிவு செயலாளர் செந்தில் ம.பொ.சி., பட்டுராமசுந்தரம் உள்பட நிர்வாகிகள், பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் தலைமையில் வே.வடிவேல், கோபி உள்பட நிர்வாகிகள்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் முதன்மை செயலாளர்கள் உஞ்சை அரசன், பாவரசு, மாவட்ட செயலாளர்கள் ரவிசங்கர், செல்வம் உள்பட நிர்வாகிகள், அ.ம.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஜி.செந்தமிழன் தலைமையில் கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, மாணவரணி செயலாளர் கார்த்திக் உள்பட நிர்வாகிகள், தே.மு.தி.க. வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சந்திரன், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் தலைமையில் பொதுச்செயலாளர் வி.எல்.சி.ரவி உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், பொருளாளர் மாரித்தங்கம், தமிழ் புரட்சி களம் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், தட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாஸ், திருவொற்றியூர் நாடார் உறவின்முறை தலைவர் எஸ்.நளராஜன், செயலாளர் எம்.காமாட்சி, நெல்லை தூத்துக்குடி நாடார் சங்க கமிட்டி உறுப்பினர் ஆர்.ராம்ராஜ், பூந்தமல்லி நாடார் சங்க தலைவர் எஸ்.ஜெயராமன், செயலாளர் ஆர்.சுரேஷ், நசரத்பேட்டை நாடார் சங்க தலைவர் பி.முருகேசன், நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் அ.முத்துக்குமார், பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, ராஜா அண்ணாமலைபுரம் நாடார் ஐக்கிய சங்க தலைவர் கே.செல்வம், பொதுச்செயலாளர் ஜே.பிரான்சிஸ், கோயம்பேடு பகுதி வணிக நல சங்க தலைவர் என்.ஆர்.பி.ஆதித்தன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

காமராஜர் பேத்திகள் கமலிகா காமராஜ், டி.எஸ்.கே.மயூரி, தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாஅத் நிறுவனர் முகமது பெரோஸ்கான், திருமழிசை நாடார் சங்க தலைவர் டி.எஸ்.அய்யாத்துரை, சென்னை நாடார் இளைஞர் சங்க தலைவர் கு.ராம்ராஜ், சென்னை-சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் எம்.ஜெய்சங்கர், தமிழன்னை கலைமன்ற செயலாளர் ரவி, எர்ணாவூர் நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் எஸ்.சுந்தரேசன், மதுரவாயல் நாடார் பேரவை தலைவர் இ.குமார், மாங்காடு சுற்று வட்டார ஐக்கிய நாடார் சங்க தலைவர் எஸ்.ராமன்,

தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் டி.எம்.மாரீஸ்வரன், திருவல்லிக்கேணி வட்டார நாடார் சங்க பொதுச்செயலாளர் சிவராஜன், தரமணி நாடார் நல்வாழ்வு சங்க பொதுச்செயலாளர் ஜே.நாராயணன், கெருகம்பாக்கம் நாடார் சங்க தலைவர் டி.உதயகுமார், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் ஆ.மணி அரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவர் பி.பரமசிவம், தமிழர் தந்தை பார் அட் லா சி.பா.ஆதித்தனார் வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எமிலிஷன், காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மதனவேல்ராஜன், திருப்பதி உள்ளிட்டோரும், ஜனதா தளம் (ஐக்கியம்), பனங்காட்டு மக்கள் கழகம், தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோரும் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை தியாகராயநகர் காமராஜர் நினைவு இல்லத்தில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ காமராஜர் உருவசிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்துக்கு மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார். பின்னர், பனங்காட்டுப்படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு இல்லத்தில் இருந்து கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடம் வரை நடத்தப்பட்ட தொடர் ஜோதி ஓட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதில் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஜோதியை ஹரிநாடார் தொடர் ஓட்டமாக கிண்டி காமராஜர் நினைவிடம் வரை தொடர் ஓட்டமாக எடுத்து வந்தார். பின்னர் அந்த ஜோதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் அவர் வழங்கினார்.

நாம் தமிழர் கட்சியின் ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் அருண் தலைமையில் கட்சி நிர்வாகிகள், ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜோசப் ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள்உள்பட பலரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரது பிறந்தநாளையொட்டி அவர்களது உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு அக்கட்சி மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை தியாகராயநகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Next Story