கள்ளக்காதால் காரணமாக நடந்த கொலைகள் பட்டியலில் சென்னை முதல் இடம் : என்.சி.ஆர்.பி.
கள்ளக்காதலால் ஏற்படும் கொலைகள் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் உள்ளது என தேசிய குற்றப் பதிவு பணியக புள்ளிவிவரம் தெரிவித்து உள்ளது.
சென்னை:
கடந்த ஆண்டு அக்டோபரில், 23 வயதான ஒரு பெண், தனது காதலனின் உதவியுடன், கணவரை கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் தனது கணவர் அதிகப்படியான மதுபானம் காரணமாக இறந்துவிட்டார் என்று கூறினார்;
இருப்பினும், அவரது கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் அவரது குட்டுவெளிப்பட்டது.
அதேபோல் சிட்லபாக்கம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு நபர், ஒரு பெண்ணுடனான விவகாரம் தொடர்பாக தனது தாயயை கொலை செய்தார். இந்த இரண்டு சம்பவங்களும் தேசிய குற்றப் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) ‘சட்டவிரோத உறவுகள்’ என வகைப்படுத்தி உள்ளது.
தேசிய குற்றப் பதிவு பணியகம் பகிர்ந்த சமீபத்திய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டில், சென்னையில் கள்ளக்காதல் காரணமாக மொத்தம் 28 கொலைகள் நடந்து உள்ளன, இது 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 19 பெருநகரங்களில் மிக உயர்ந்தது. மேலும் சென்னையில் சாதாரண தகராறு காரணமாக 90 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது மேற்கூறியவற்றில் இரண்டாவது மிக உயர்ந்தது ஆகும், இதில் டெல்லி 125 வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
வயதானவர்கள் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் தமிழகம் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2019 ஆம் ஆண்டில், இதுபோன்ற 117 வழக்குகள் மாநிலத்தில் பதிவாகியுள்ளன, இதற்கு முன் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 209 வழக்குகள் உள்ளன. மூத்த குடிமக்கள் வயதானவர்கள் கொலை செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கூறிய ஒரு போலீஸ் அதிகாரி, ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தனியாக வசிக்கும் முதியவர்களின் விவரங்களைச் சேகரிக்க அனைத்து நகர காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொலைக்கான காரணங்கள் | 2109 ஆம் ஆண்டில் வழக்குகள் |
தகராறு | 90 |
கள்ளக்காதல் | 28 |
குடும்ப தகராறு | 60 |
சிறிய தகராறு | 34 |
தனிப்பட்ட பகை | 52 |
Related Tags :
Next Story