தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 3 Oct 2020 2:23 PM IST (Updated: 3 Oct 2020 2:23 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அக்டோபர் 3 அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல, அக்டோபர் 3 லிருந்து 5 வரை வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்" என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக காவேரிப்பாக்கம், ஏற்காட்டில் தலா 10 செ.மீ மழையும், ஊத்தங்கரை, போரூரில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story