நாளையும் தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் - அமைச்சர் காமராஜ்
நாளையும் தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வந்த மழையின் காரணமாக, நெல் மணிகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று முதல் திருவாரூர் மாவட்டத்தில் 189 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சன்னரக நெல், குவிண்டால் ஒன்றுக்கு 70 ரூபாய் ஊக்கத்தொகை சேர்ந்து ஆயிரத்து 958 ரூபாய்க்கும், பொது ரக நெல், 50 ரூபாய் ஊக்கத்தொகை சேர்த்து ஆயிரத்து 918 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல் மணிகளின் ஈரப்பதத்தை கணக்கிடாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான நாளையும் தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்றும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தினந்தோறும் ஆயிரம் மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தேவையான இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி வழங்குமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story