ராகுல்காந்தி கைதை கண்டித்து பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது


ராகுல்காந்தி கைதை கண்டித்து பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது
x
தினத்தந்தி 4 Oct 2020 4:30 AM IST (Updated: 4 Oct 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி கைதை கண்டித்து பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோரின் கைதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தமிழக பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.

இதற்காக, சென்னை பாரிமுனையில் ஒன்றிணைந்த காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். உடனடியாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது, காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே சிலர் பிரதமர் மோடியின் உருவ படத்தை எரிக்க முயன்றனர். அதனை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வால்டாக்ஸ் சாலை, அண்ணாபிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

Next Story