ரெயில்களில் 50 கிராம் அளவிலான உணவு அதிக விலைக்கு விற்பனை என குற்றச்சாட்டு - தெற்கு ரெயில்வே விளக்கம்
ரெயில்களில் 50 கிராம் அளவிலான உணவு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பல்வேறு கட்டுபாடுகளுடன் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில், ஐ.ஆர்.சி.டி.சி.யின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட பொங்கல் 50 கிராம் அளவில் இருந்ததாகவும், அதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாகவும் பயணி ஒருவர் செல்போனில் எடுத்து வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்து தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
ரெயிலில் பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா தொற்று பரவாலால், பாதுகாப்பு கருதி ஏ.சி பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வைகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதேபோல் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் உணவு தயாரித்து பயணிகளுக்கு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ரெயில்களில் உணவு பொருட்கள் தயாரிப்பது இல்லை.
பயணிகள் தங்களுக்கு தேவை யான உணவு பொருட்களை தாங்களே கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டும் உள்ளது. ஆனால் ரெயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் நடமாடும் உணவு பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணிகளுக்கு பார்சல் செய்யப்பட்ட சிப்ஸ், பிஸ்கட் மற்றும் தண்ணீர், தேநீர் போன்ற உணவு வகைகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
அதுதவிர ஐ.ஆர்.சி.டி.சி அனுமதி பெற்ற, உணவு நிறுவனம் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பாதுகாப்பான முறையில் வழங்கப்படுகிறது. அதன்படி 61 கிராம் பார்சல் செய்யப்பட்ட பொங்கல் வழங்கப்படுகிறது. மேலும் அந்த உணவு உட்கொள்ளும் முன் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்சல் செய்யப்பட்டு கொடுக்கபட்ட உணவில், சூடான நீரை ஊற்ற வேண்டும். பிறகு 8 நிமிடம் கழித்து பார்த்தால், 220 முதல் 230 கிராம் உணவாக கிடைக்கும். இந்த வழிமுறை பார்சல் செய்யப்பட்டுள்ள உணவின் மேல் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story