சென்னை மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 36 ஆக அதிகரிப்பு


சென்னை மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 36 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Oct 2020 4:10 PM IST (Updated: 5 Oct 2020 4:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 36 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, 

சென்னையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டத்தில் இருந்து வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் தற்போது மெல்ல மெல்ல கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில் சென்னையில் 12 மண்டலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 12 மண்டலங்களில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலத்தில் 9.6 சதவீதமும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5.7 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 5.4 சதவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 5.3 சதவீதமும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 4.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அம்பத்தூர் மண்டலத்தில் 3.8 சதவீதமும், அடையாறில் 3.5 சதவீதம், தேனாம்பேட்டையில் 3.1 சதவீதம், கோடம்பாக்கம் 2.7 சதவீதம், அண்ணாநகரில் 1.8 சதவீதமும், மணலியில் 1.3 சதவீதமும், ராயபுரத்தில் 0.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு முன்பை விட 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் பெருங்குடியில் 0.5 சதவீதமும், வளசரவாக்கத்தில் 0.9 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1.1 சதவீதமும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. 

சென்னையில் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை1,348 ஆக இருந்தது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,72,773 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,57,216 ஆக உள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,283 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 3,274 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில் சென்னை மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 36 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 16 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story