வழிகாட்டு குழுவில் யார் - யார்? ஓ.பன்னீர் செல்வத்துடன் கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆலோசனை
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை
அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே நேற்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. வழிகாட்டு குழுவை அமைக்க ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வழிகாட்டு குழுவில் இடம்பெற போகும் உறுப்பினர்கள் யார் - யார்?, அந்த குழுவுக்கு என்ன அதிகாரம் இருக்கும்? என்பது குறித்து இன்று இருதரப்புக்கும் இடையே கருத்து பரிமாற்றம் இருக்கும். அதில் ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டுவிட்டால், நாளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இதுகுறித்த அறிவிப்பையும் ஒன்றாக இணைந்து வெளியிடுவார்கள். நேற்று பேச்சுவார்த்தையில் நடந்த முன்னேற்றம் குறித்து இருதரப்புக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, நேற்று மாலையில் தேனியில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு இரவு சென்னை வந்து சேர்ந்தார்.
இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story