முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு
x
தினத்தந்தி 6 Oct 2020 7:01 PM IST (Updated: 6 Oct 2020 7:01 PM IST)
t-max-icont-min-icon

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, 

நாளை முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஓ.பி.எஸ். உடன் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து 2.30 மணி நேரம் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடன் ஆலோசனை நிறைவடைந்த நிலையில், பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் மீண்டும் ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முதல்வருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.  

நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Next Story