துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ஸை இன்று மாலை சந்திக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி


துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ஸை இன்று மாலை சந்திக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 7 Oct 2020 1:58 PM IST (Updated: 7 Oct 2020 1:58 PM IST)
t-max-icont-min-icon

துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை இன்று மாலை முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார்.  அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த அறிவிப்பை ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டார். 

அதேபோல், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.  இந்த நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளார். ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story