மாநில செய்திகள்

மின் கணக்கீட்டுக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Dismissal of revision petition against EB calculation - Chennai High Court order

மின் கணக்கீட்டுக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மின் கணக்கீட்டுக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மின் கணக்கீட்டுக்கு எதிரான சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின் கணக்கீடு எடுக்காத நிலையில் ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு எடுக்கப்பட்டு மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மின் கணக்கீடு முறையில் எந்த விதி மீறலும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் அனைத்து தரப்பினருக்கும் மின் கட்டணம் பல மடங்காக அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி எம்.எல்.ரவி மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. முடிவில், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.