மாநில செய்திகள்

‘கட்டுமான பணி நிறைவு சான்று’ பெற வேண்டிய ஆணையை நீக்கியது ஏன்? - திமுக எம்.பி. கனிமொழி கேள்வி + "||" + Why was the order to obtain ‘construction completion certificate’ removed? - DMK MP Kanimozhi question

‘கட்டுமான பணி நிறைவு சான்று’ பெற வேண்டிய ஆணையை நீக்கியது ஏன்? - திமுக எம்.பி. கனிமொழி கேள்வி

‘கட்டுமான பணி நிறைவு சான்று’ பெற வேண்டிய ஆணையை நீக்கியது ஏன்? - திமுக எம்.பி. கனிமொழி கேள்வி
‘கட்டுமான பணி நிறைவு சான்று’ இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என்ற ஆணையை நீக்கியது ஏன்? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் புதிய கட்டடங்கள் கட்டும்போது, மின் இணைப்பு பெற, ‘கட்டுமான பணி நிறைவு சான்று’ பெற வேண்டியது அவசியம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம், ஆணை பிறப்பித்தது. ஆனால் தமிழக அரசு இந்த ஆணையை சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவித்தது.


இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், “கட்டுமான பணி நிறைவு சான்று' இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்பட மாட்டாது என்ற ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன? இந்த விதியையும் நீக்கினால் அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஆட்சி முடிய இன்னும் ஆறே மாதங்கள் இருப்பதால் அதற்குள் வசூலை அதிகரிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.