மாநில செய்திகள்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் - திருமாவளவன் கண்டனம் + "||" + Periyar statue wore garland policemen transfer Thirumavalavan condemned

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் - திருமாவளவன் கண்டனம்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் - திருமாவளவன் கண்டனம்
கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் மூன்று போலீஸ்காரர்கள் இடமாற்றம்? செய்யப்பட்டுள்ளனர். இதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை

கடலூரில் செப்டம்பர் 17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று அண்ணா பாலம் அருகில் இருக்கும் அவரது சிலைக்கு புது நகர் போலீஸ்நிலைய போலீஸ்காரர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் 3 பேர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்த புகைப்படங்களை சமுக வலைதலங்களில் பதிவேற்றினர். இதன் காரணமாக அவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மூவரும் காவலர் உடையில் மாலை அணிவிக்கவில்லை, கருப்பு சட்டை அணிந்துதான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இருப்பினும் இவர்கள் மாலை அணிவித்திருப்பதை பார்த்த சிலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பணியில் இருக்கும் போது எப்படி பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கலாம் என அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் இவர்களை இடமாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ஆனால், நிர்வாக ரீதியாக இடமாற்றம் செய்யப்பட்டதாக மட்டும் அவர்களிடம் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காவலர்கள் இடமாற்றம் செய்திருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி அருகே நள்ளிரவில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. கடலூர், விருத்தாசலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அரியர் தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கடலூரில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்
கடலூரில், அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு: சென்னை, புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை, புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.