வேறு கட்சியில் இருந்தாலும் எனக்கும் அவர் முதல்-அமைச்சர்தான் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதில் தவறு இல்லை நடிகை குஷ்பு பேட்டி


வேறு கட்சியில் இருந்தாலும் எனக்கும் அவர் முதல்-அமைச்சர்தான் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதில் தவறு இல்லை நடிகை குஷ்பு பேட்டி
x
தினத்தந்தி 9 Oct 2020 2:45 AM IST (Updated: 9 Oct 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து சொல்லி உள்ளேன். இதில் தவறு இல்லை.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் வேறு கட்சியில் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி எனக்கும் முதல்-அமைச்சர் தானே. நான் தமிழகத்தில் தான் உள்ளேன். எனவே அவர்கள் கட்சியில் முதல்-அமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து சொல்லி உள்ளேன். இதில் தவறு இல்லை.

2021-ம் ஆண்டு தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்க போகிறது. தி.மு.க.வில் கருணாநிதி, அ.தி.மு.க.வில் ஜெயலலிதா ஆகியோர் இல்லாத தேர்தலாக இருக்கும். இரு கட்சிகளுக்கும் புதிய தேர்தலாக இருக்கும். கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு அரசு மட்டும் காரணம் கிடையாது. மக்கள் எத்தனை பேர் முக கவசத்துடன் செல்கின்றனர். எத்தனை பேர் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனர்.

நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story