ரோமன் கட்டிடக்கலை பாணியில் சோழிங்கநல்லூரில் 15 ஏக்கரில் ‘காசாகிராண்ட்’ அடுக்குமாடி குடியிருப்புகள் 100-க்கும் மேற்பட்ட உயர்தர வசதிகளுடன் உருவாகிறது


ரோமன் கட்டிடக்கலை பாணியில் சோழிங்கநல்லூரில் 15 ஏக்கரில் ‘காசாகிராண்ட்’ அடுக்குமாடி குடியிருப்புகள் 100-க்கும் மேற்பட்ட உயர்தர வசதிகளுடன் உருவாகிறது
x
தினத்தந்தி 9 Oct 2020 4:47 AM IST (Updated: 9 Oct 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

ரோமன் கட்டிடக்கலை பாணியில் சென்னை சோழிங்கநல்லூரில் 15 ஏக்கரில் காசாகிராண்ட் அடுக்குமாடி குடியிருப்புகள் 100-க்கும் மேற்பட்ட உயர்தர வசதிகளுடன் உருவாகிறது.

சென்னை,

தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ‘காசாகிராண்ட்’ நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது சென்னை சோழிங்கநல்லூரில் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த பசுமை புல்வெளியுடன் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்க உள்ளது. இதற்கு காசாகிராண்ட் ‘பர்ஸ்ட் சிட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த பர்ஸ்ட் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 1,700-க்கும் மேற்பட்ட உயர்ரக குடியிருப்புகள் ரோமானிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட இருக்கிறது. 2, 3 மற்றும் 4 படுக்கை அறை வசதிகளை கொண்டு இருக்கும் காசாகிராண்ட்டின் அடுக்குமாடி குடியிருப்பு சொந்தவீடு வாங்குபவர்களுக்கு சிறந்த வாழ்க்கை முறையை வழங்கும்.

தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைய உள்ள பகுதியின் சந்தைவிலை ஒரு சதுரஅடி ரூ.6 ஆயிரத்து 500 என்று இருக்கிறது. ஆனால் காசாகிராண்ட் மிகக்குறைந்த விலையாக ஒரு சதுரஅடி ரூ.3 ஆயிரத்து 799-க்கு வழங்க இருக்கிறது.

இந்த குடியிருப்புகளில் வீடுகளை வாங்குபவர்களுக்கு ஆடம்பரமான, சிறப்பு அம்சங்கள் நிறைந்த குடியிருப்பாக இருக்கும். இந்த குடியிருப்பின் நுழைவு வாயிலில் ரோமானிய கட்டிடக்கலையை பின்பற்றி ஒரு ‘ஆர்ச்’ கட்டப்பட உள்ளது.

மேலும் வரவேற்பு பகுதியானது அனைத்து டவர்களையும் இணைக்கும் மையப்பகுதியாக இருக்கும். அதன்படி, ஒவ்வொரு டவரும் 1.5 ஏக்கரில் கட்டப்பட இருக்கிறது. ஒவ்வொரு டவரிலும் தனித்தனியே கிளப்ஹவுஸ், விருந்தினர் கூடங்கள் இருக்கும்.

இந்த குடியிருப்பானது சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து வெறும் 5 நிமிட தூரத்தில் இருக்கிறது. குடியிருப்பு வளாகத்துக்குள் வர்த்தக மையம், ஆம்பிதியேட்டர், உடற்பயிற்சிக்கான நடைபாதைகள், ரோபாட்டிக்ஸ் அறை, முதியவர்களுக்கான உடற்பயிற்சி நிலையம், சிமுலேஷன் கேமிங், நீச்சல்குளம், அக்குவா ஜிம், ஸ்பா, சலூன், விர்ச்சுவல் ரியாலிட்டி கேம், விருந்தினர் கூடங்களில் சைலண்ட் டிஸ்கோ, அவுட்டோர் ஜக்குஸி உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆடம்பரமான, உயர்தரமான சிறப்பு அம்சங் களை கொண்டு இருக்கிறது.

குடியிருப்புக்கு அருகிலேயே பள்ளிகள், வணிகமையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை இருக்கின்றன. உலக புகழ்பெற்ற கட்டிடக்கலை நிறுவனமான கெம்பவி இந்த குடியிருப்பை வடிவமைக்கிறது.

இதுகுறித்து காசாகிராண்ட் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஈஸ்வர் கூறுகையில், ‘பர்ஸ்ட் சிட்டி குடியிருப்பானது சென்னையில் அமைய உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எங்கள் பயணத்தின் மிக முக்கிய மைல்கல்லை குறிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது வாழ்க்கையை பிரமாண்டமாக வாழ தகுதியுடையவர்கள், அதை இந்த திட்டத்தின் மூலம் நாங்கள் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

Next Story