மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இணைந்துள்ளார்.
சென்னை,
விளாத்திக்குளம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வி.மார்க்கண்டேயன், ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, இணை செயலாளர் பாலமுருகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
துறைமுகம் பகுதி அ.தி.மு.க. முன்னாள் செயலாளரும், ஜார்ஜ் டவுன் நகர கூட்டுறவு வங்கி இயக்குனருமான சரவணக்குமார் தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிகழ்வுகளில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story