மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் வீட்டில் இருந்தபடியே ‘சாக்லேட்’ தயாரிப்பது எப்படி? ஆன்லைன் மூலம் பயிற்சி


மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் வீட்டில் இருந்தபடியே ‘சாக்லேட்’ தயாரிப்பது எப்படி? ஆன்லைன் மூலம் பயிற்சி
x
தினத்தந்தி 11 Oct 2020 4:30 AM IST (Updated: 11 Oct 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் வீட்டில் இருந்தபடியே சாக்லேட் தயாரிப்பது எப்படி? என்பது குறித்து ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னை, 

இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் வாரம் ஒருமுறை தொழிற்பயிற்சிகளை பெண்களுக்காக கட்டணமில்லாமல் நடத்தி வருகிறது. ஆன்லைன் மூலமாக ‘பயிற்சி வளர்ச்சி’ என்ற பெயரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த வாரம் வீட்டில் இருந்தபடியே சாக்லேட் தயாரிப்பது எப்படி? என பயிற்சி வழங்கப்படும்.

வீட்டிலேயே தயாரிப்பதால் சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கும் இந்த சாக்லேட்டுகளை குழந்தைகளுக்கு தரலாம். அதுமட்டுமில்லாமல் இதற்கான மூலப்பொருட்களை குறைந்த விலையில் எங்கு வாங்குவது? போன்றவையும் தெரிவிக்கப்படும்.

தயாரிக்கும் பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் மேலும் இதற்கான ஆர்டர்களை எங்கு வாங்கலாம்? என்பது பற்றிய தகவல்களும் அளிக்கப்படும்.

இந்த பயிற்சியானது 11-ந் தேதி(இன்று) மாலை 3 மணிமுதல் 4.30 மணிவரை ஆன்லைன் மூலமாக அளிக்கப்படும். தங்களுடைய ஆன்டிராய்டு செல்போனில் இந்த பயிற்சியை form.wewatn.com/ ஐ.டி. எண். 86231288454 என்பதன் மூலமாக நேரடியாக கற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story