கம்யூனிஸ்டு கட்சி (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா பாதித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை,
நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. அதிலும் சென்னையில் நாள்தோறும் பாதிப்புகளின் எண்ணிக்கை மற்ற நகரங்களை விட அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா வைரசால் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக இருந்து வருபவர் கே. பாலகிருஷ்ணன். இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையின் முடிவில் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story