15 ஆண்டுகளாக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணம் செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
15 ஆண்டுகளாக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணம் செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்காதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணம் செய்வதற்கான வசதிகள் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 15 ஆண்டுகளாக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணம் செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியது.
மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிசம்பர் 10 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க தலைமை செயலாளர், மற்றும் போக்குவரத்து துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story