முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்
முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் காலமானார்.
சென்னை,
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராம், இப்பகுதியைச் சேர்ந்த கருப்பகவுண்டர் மனைவி தவசாயிஅம்மாள் (வயது 93) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரான இவர், திங்கள் அன்று இரவு சுமார் 11 மணி அளவில், முதலமைச்சர் சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலவம்பாளைம் கிராமத்தில் உள்ள அவரது பூர்வீக இல்லதில் காலமானார்.
வயது முதிர்வால் காலமான அவருக்கு கோவிந்தராஜ், பழனிசாமி ஆகிய இரு மகன்களும், ரஞ்சிதம்(எ)விஜயலட்சுமி, என்ற ஒரு மகளும் உள்ளனர்.
கருப்பகவுண்டர் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், அவரது மகனான முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்தில் வசித்து வந்த தவசாயி அம்மாள் திங்கள்கிழமை இரவு 11 மணி அளவில் காலமானார். சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அரசு நிகழ்வுகளுக்கான சுற்றுப்பயணங்களை ரத்து செய்துவிட்டு, தனது சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
Related Tags :
Next Story