திண்டுக்கல் அருகே சிறுமி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு
திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குரும்பபட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆண்டு ஏப்.16-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதையடுத்து செப்டம்பர் 29-ம் தேதி இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட கிருபானந்தன் என்ற இளைஞரை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் மாநில அளவில் முடிதிருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் திண்டுக்கல் அருகே சிறுமி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
Related Tags :
Next Story