தமிழகத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி அளவில் ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது
சென்னை,
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நேற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி அளவில் ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது, தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 (14.10,2020) மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 11 செ.மீ., சின்னக்கல்லாறில்9 செ.மீ., சோலையாறு, நடுவட்டத்தில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story