திமுக தேர்தல் அறிக்கை வரும் தேர்தலில் ஜீரோவாக தான் இருக்கும் - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்


திமுக தேர்தல் அறிக்கை வரும் தேர்தலில் ஜீரோவாக தான் இருக்கும் - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்
x
தினத்தந்தி 14 Oct 2020 11:29 AM IST (Updated: 14 Oct 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

திமுக தேர்தல் அறிக்கை வரும் தேர்தலில் ஜீரோவாக தான் இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அடையாறில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக தேர்தல் அறிக்கை வரும் தேர்தலில் ஜீரோவாக தான் இருக்கும். வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பாஜகவில் தொடர்ந்து பலர் இணைந்து வருகின்றனர். 

சமூகத்தில் ஒற்றுமை நிலவ அரசு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.திமுக தலைவர், அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அறிக்கை மட்டுமே விடுகின்றனர்.  ஊராட்சியில் தலித் விவகாரத்தில் திமுக தலைவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story