சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராக தொடர்ந்த வழக்கு: திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பு தகவல்


சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராக தொடர்ந்த வழக்கு: திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பு தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2020 6:21 AM GMT (Updated: 14 Oct 2020 6:26 AM GMT)

சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

கொரோனா பொதுமுடக்கம் காரணாமாக கடந்த 6 மாத காலமாக தமிழகம் முழுவதும் பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டு கிடந்தன. தற்போது தான் தளர்வுகள் அடிப்படையில் திருமண மண்டபங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி கோரியுள்ளது. இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்துவரி செலுத்த கூறிய நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்ப பெறுவதாக  நடிகர் ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மண்டபம் காலியாக இருந்ததால் வரி குறைப்பு பெற தனக்கு உரிமை உள்ளது என ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் என ரஜினிகாந்த் தரப்புக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் கண்டனம் தெரிவித்தார்.

Next Story