அமமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து கவலைக்கிடம்
வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால், கடந்த 6-ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வெற்றிவேல் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை,
அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல், சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால், கடந்த 6-ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால், கடந்த 9-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியூ) மாற்றப்பட்டார். வென்ட்டிலேட்டரில் (செயற்கை சுவாசம்) உள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக பொருளாளருமான வெற்றிவேல் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தொடர்ந்து கவலைக்கிடம்#AMMK | #COVID19 | #Vetrivelpic.twitter.com/zfgpQ6vs4b
— Thanthi TV (@ThanthiTV) October 14, 2020
Related Tags :
Next Story