வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை, வணங்கி நினைவு கூர்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட்


வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை, வணங்கி நினைவு கூர்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட்
x
தினத்தந்தி 16 Oct 2020 11:30 AM IST (Updated: 16 Oct 2020 11:30 AM IST)
t-max-icont-min-icon

வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை, வணங்கி நினைவு கூர்கிறேன் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் சிறு முயல் கூட சிங்கத்தை எதிர்த்து நிற்கும் என்பது சொல்லடை. காகம் பறவாது கட்டபொம்மன் கோட்டையிலே என்று பழமொழி வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பறை சாற்றும்.

புதுக்கோட்டை மன்னனின் துரோகத்தால் வீரபாண்டிய கட்டபொம்மன் பிடிபட்டார். விசாரணை என்ற சதியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டது. 16-10-1799-ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் முருகனை வணங்கி ஓர் நெடுஞ்சாலை புளியமரத்தில் தூக்கு கயிறை தன் கழுத்தில் தானே மாட்டிக்கொண்டு வீர மரணம் அடைந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் 39 ஆண்டுகள் வாழ்ந்தார். எட்டப்பன், புதுக்கோட்டை மன்னன் போன்றோரின் துரோகத்தால் அவர் இறந்து 220 ஆண்டுகள் ஆகின்றன. வரலாற்றில் மாவீரனாக மடிந்த முதல் அடையாளமாக வீரபாண்டியனின் பெயர் நிலைத்திருக்கும். வீரபாண்டியனின் மரணம் வீழ்ச்சி அல்ல. எப்போது நினைத்தாலும் ஒரு புத்தெழுச்சி எழும்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது"என்ற நிலைப்பாட்டில்  உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story