அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல்; டி.டி.வி. தினகரன்
அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல் என டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அ.ம.மு.க. பொருளாளரான வெற்றிவேல், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியான நிலையில், கடந்த 6ந்தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இதனால், கடந்த 9ந்தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். வென்ட்டிலேட்டரில் (செயற்கை சுவாசம்) வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 14ந்தேதி அவரது உடல்நலம் மோசமடைந்தது. மருத்துவர்கள் அளித்து வந்த சிகிச்சை பலனின்றி அவர், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல் என தெரிவித்து உள்ளார்.
துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்தி ஜெயலலிதாவின் கொள்கைகளை வாழவைப்பதே வெற்றிவேலுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story