சென்னையில் 4 நாட்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்-துரைமுருகன் அறிவிப்பு


சென்னையில் 4 நாட்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்-துரைமுருகன் அறிவிப்பு
x

மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 4 நாட்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை, 

மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 4 நாட்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 21, 23, 27, 28 ஆகிய தேதிகளில் மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் கண்டுள்ளபடி, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மட்டும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் கட்சி ஆக்க பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

21-ந் தேதி புதன்கிழமை மேற்கு மண்டலத்திற்கு நடைபெறும் கூட்டத்தில், காலை 9 மணிக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், மாலை 4 மணிக்கு சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கும்.

23-ந் தேதி வெள்ளிக்கிழமை தெற்கு மண்டலத்திற்கு நடைபெறும் கூட்டத்தில், காலை 9 மணிக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மாலை 4 மணிக்கு ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கும்.

27-ந் தேதி செவ்வாய்க் கிழமை கிழக்கு மண்டலத்திற்கு நடைபெறும் கூட்டத்தில், காலை 9 மணிக்கு புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மாலை 4 மணிக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கும்.

28-ந் தேதி புதன்கிழமை வடக்கு மண்டலத்திற்கு நடைபெறும் கூட்டத்தில், காலை 9 மணிக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, மாலை 4 மணிக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் இடம்பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story