ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை


ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 17 Oct 2020 6:16 AM IST (Updated: 17 Oct 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டது. இந்த பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது விடுமுறை தினங்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி ஆகிய நாட்களில் மேற்கொண்டனர்.

எனவே ரேஷன் கடைகள் வேலை நாட்களாக செயல்பட்ட அந்த நாட்களுக்கு செப்டம்பர் 19, அக்டோபர் 17(இன்று), நவம்பர் 21-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story