திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உயிரிழப்பு


திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 Oct 2020 11:47 AM IST (Updated: 17 Oct 2020 11:47 AM IST)
t-max-icont-min-icon

சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியனின் இளைய மகன் அன்பழகன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.

சென்னை,

திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ.வுமான மா.சுப்ரணியத்தின் இளைய மகன் அன்பழகன் (வயது 34) கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தார்.

மா. சுப்ரமணியத்துக்கும், அவரது மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

சுப்ரமணியனின் மகன் அன்பழகன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டு இன்று உயிரிழந்தார். இவரது மறைவு திமுகவினற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story