மேலும் 5 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்-முன்பதிவு இன்று தொடங்குகிறது


மேலும் 5 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்-முன்பதிவு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 18 Oct 2020 3:00 AM IST (Updated: 18 Oct 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

மேலும் 5 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது.

சென்னை, 

மேலும் 5 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* கயா-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 02389) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் கயா ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூர்-கயா (02390) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 27-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 3, 10, 17, 24-ந்தேதி, டிசம்பர் மாதம் 1-ந்தேதிகளில் காலை 7 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்.

* புவனேஷ்வர்-புதுச்சேரி (02898) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 20, 27-ந்தேதி, நவம்பர் மாதம் 3, 10, 17, 24-ந் தேதிகளில் மதியம் 12 மணிக்கு புவனேஷ்வரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக புதுச்சேரி-புவனேஷ்வர் (02897) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 21, 28-ந்தேதி, நவம்பர் மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளில் புதுச்சேரியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும்.

கோரக்பூர்-திருவனந்தபுரம்

* செகந்தராபாத்-திருவனந்தபுரம் (07230) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 28-ந்தேதி வரை தினசரி மதியம் 12.20 மணிக்கு செகந்தராபாத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-செகந்தராபாத் (07229) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை தினசரி காலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும்.

* கோரக்பூர்-திருவனந்தபுரம் (02511) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 23, 25, 30-ந்தேதி, நவம்பர் மாதம் 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29-ந் தேதிகளில் காலை 6.35 மணிக்கு கோரக்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-கோரக்பூர் (02512) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 27, 28-ந்தேதி, நவம்பர் மாதம் 3, 4, 10, 11, 17, 18, 24, 2-ந்தேதி, டிசம்பர் மாதம் 1, 2-ந்தேதிகளில் காலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

முன்பதிவு இன்று தொடக்கம்

* மந்தாதி-ராமேஸ்வரம் (05120) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி, நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் இரவு 9 மணிக்கு மந்தாதி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக ராமேசுவரம்-மந்தாதி (05119) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 28-ந்தேதி, நவம்பர் மாதம் 4, 11, 18, 2-ந்தேதி, டிசம்பர் மாதம் 2-ந்தேதிகளில் இரவு 11 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலை 8 மணியில் இருந்து கவுண்ட்டர்கள் மற்றும் ‘ஆன்-லைனில்’ செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story