மாநில செய்திகள்

சென்னை தலைமை செயலகத்தில் 3-வது உலக புள்ளியியல் தின விழா - அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைக்கிறார் + "||" + Minister Cellur Raju inaugurates the 3rd World Statistics Day celebrations at the General Secretariat

சென்னை தலைமை செயலகத்தில் 3-வது உலக புள்ளியியல் தின விழா - அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்

சென்னை தலைமை செயலகத்தில் 3-வது உலக புள்ளியியல் தின விழா - அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற உள்ள 3-வது உலக புள்ளியியல் தின விழாவை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்.
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 20-ந் தேதி காலை 11 மணி அளவில் 3-வது உலக புள்ளியியல் தின விழா நடைபெற உள்ளது. விழாவை கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலன் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைக்கிறார். தலைமை செயலாளர் கே.சண்முகம் சிறப்புரை ஆற்றுகிறார். மேலும், பல முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.


மேலும், மாநிலம் முழுவதும் உள்ள புள்ளியியல் துறை அலுவலகங்களில் 19-ந் தேதி (நாளை) இவ்விழாவினை இணைய வழியில் கொண்டாடுவதுடன் அலுவலக புள்ளியியல் சம்பந்தமாக வினா-விடை போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வருகிற 21-ந் தேதி பல்வேறு மத்திய, மாநில அரசு துறை மற்றும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தேர்ந்த கல்வியாளர்கள் பல்வேறு புள்ளியியல் சார்ந்த தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாதிக்கபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. தலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று:பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோன - தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை
சென்னையில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் தலைமை செயலக ஊழியர்கள் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க.எம்.எல்.ஏ.வும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.