மாநில செய்திகள்

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் + "||" + Suspension of the results of a large number of students in the final semester examination of engineering AnnaUniversity

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைப்பு - அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைப்பு - அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,

கொரோனா காலத்தில் இந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. 

இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 24 முதல், இளங்கலை மற்றும் முதுகலை இறுதி செமஸ்டர் தேர்வுகள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உதவியுடன் தேர்வுகளை நடத்தியது. செப்டம்பர் 29-ம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வில், 30 மதிப்பெண்களுக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறால் சரியாகத் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பினையும் அளித்தது. அதன் விடைகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, ஆன்லைனில் முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. சில மாணவர்களுக்கு WH1 என தேர்வு முடிவு காண்பிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  ஆன்லைன் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகம் என்பதால் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சில இறுதியாண்டு மாணவர்கள் வளாகத் நேர்முகங்கள் மூலம் பணிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு - அண்ணா பல்கலைக்கழகம்
நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
2. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை-அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்று தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
3. அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
4. அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிகிறது- சட்டசபையில் மசோதா நிறைவேறியது
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேறியது.
5. அண்ணா பல்கலைக்கழகம் கல்விக் கட்டணம் செலுத்த கெடு விதித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது - மு.க.ஸ்டாலின் அறிக்கை
கல்விக்கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் விதித்துள்ள கெடு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.