நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு - அண்ணா பல்கலைக்கழகம்
நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு நடத்தியது.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொறியியல் மாணவர்களுக்கு முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற்ற, இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.
தேர்வு முடிவுகளை www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்வு முடிவு நிறுத்தப்பட்டது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,
அன்ணா பல்கலைக்கழக தேர்வை செப்.24 முதல் செப்.29 வரை ஆன்லைனில் நடத்திய தேர்வை 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில் முறைகேடாக தேர்வு எழுதியது தொழில்நுட்ப அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 3,000 மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வீடியோவை ஆய்வு செய்யும் குழுவின் முடிவு அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவு வெளியடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story