முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் ஆகிய ஊர்களுக்கான அரசுமுறை பயணத்தை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார்.
சிலுவம்பாளையத்தில் தனது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார். தொடர்ந்து காரிய நிகழ்வுகளிலும் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை முடித்துக்கொண்டு, நேற்று மாலை 6.05 மணிக்கு சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு 9.20 மணிக்கு அவர் சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் வீட்டில் இந்த சந்திப்பு இன்று காலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story