7 வயது சிறுவனை உடல் முழுவதும் கடித்து துன்புறுத்திய தாயின் காதலன்
7 வயது சிறுவனை உடல் முழுவதும் கடித்து துன்புறுத்திய தாயின் காதலனை போலீசார்தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த சசிகலா (34) என்பவர் கணவர் இறந்து விட்ட நிலையில், முருகன் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
சசிகலாவுக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகள், மூத்த மகன் சசிகலாவின் சகோதரியின் பராமரிப்பில் உள்ளனர். காஞ்சாம்பாறை பகுதியில் 7 வயது மகனுடன் சசிகலா வசித்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் முருகனுடன் சசிகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு, முருகனும் சசிகலாவும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஒரே வீட்டில் வசித்த போது, முருகன் சசிகலாவின் 7 வயது மகனை துன்புறுத்துவதை வழக்கமா வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முருகன் சிறுவனின் முதுகு, கை, காலின் தொடை பகுதிகளில் ஆழமாக கடித்து துன்புறுத்தியுள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கதினர் திரண்டு வந்தனர். பிறகு சிறுவன் கொடுமைப்படுத்துவது குறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக , சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் முருகனிடத்தில் விசாரணை நடத்தினர்.
சிறுவனின் உடல் பகுதியில் பல இடங்களில் முருகன் கடித்து வைத்ததில் ரத்தக் காயம் இருந்தது. சிறுவனை மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்த பிறகு, சிறுவனை காப்பகத்தில் சேர்க்க குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே, போலீசாரிடத்திலிருந்து முருகன் தப்பி விட, அவனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Related Tags :
Next Story