டெல்டா மாவட்டங்களில் சேதமாகும் நெல் மூட்டைகள்: அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
டெல்டா மாவட்டங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து வீணாகின்றன.
சென்னை,
இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
விளைந்தும் விலையில்லை எனும் அவலநிலையாக, டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள் நனைந்து, முளைத்து வீணாகின்றன.
உரியமுறையில் கொள்முதல் நடைபெறாமல் ஆள்வோரின் ஊழல் பெருச்சாளிகள் செய்யும் அட்டகாசங்கள் ஓயவில்லை.இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். பயிர்தான் விவசாயிகளின் உயிர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story