சென்னை-பெங்களூரு இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்


சென்னை-பெங்களூரு இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2020 8:55 AM IST (Updated: 21 Oct 2020 8:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்ட்ரல்-பெங்களூரூ இடையே இன்றுமுதல் டபுள் டக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை, 

சென்னை சென்ட்ரல்-பெங்களூரூ இடையே இன்றுமுதல் டபுள் டக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு நேற்றுமுதல் தொடங்கியது.

இதன்படி சென்னை-பெங்களூரு ஏ.சி. ‘டபுள் டக்கர்’ அதிவேக சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06075), இன்று காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். 

இதைப்போல் பெங்களூரு-சென்னை ஏ.சி. ‘டபுள் டக்கர்’ அதிவேக சிறப்பு ரெயில் (06076), இன்று மதியம் 2.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

Next Story