கால்நடை உதவி மருத்துவர் பதவி: தற்காலிகமாக தேர்வானவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


கால்நடை உதவி மருத்துவர் பதவி: தற்காலிகமாக தேர்வானவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 11:50 PM IST (Updated: 21 Oct 2020 11:50 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2019-20-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர் பதவி குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. 1,141 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 15 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

தேர்வில் வெற்றிபெற்று தற்காலிகமாக தேர்வான 1,942 பேர் தங்களுடைய சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story